உங்கள் DASHCAM ஐ ஏன் KLOUDIP மூலம் பொருத்த வேண்டும்?
15 வருடங்களுக்கும் மேலான டெலிமேட்டிக்ஸ் அனுபவம் மற்றும் இலங்கை முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட வாகனங்களுடன், KLOUDIP வெறும் dashcam பொருத்துதலை விட அதிகமாக வழங்குகிறது — நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம், நாடு தழுவிய உதவி மற்றும் மேம்பட்ட கிளவுட் தளத்துடன் கூடிய முழுமையான காணொளி டெலிமேட்டிக்ஸ் தீர்வை வழங்குகிறோம்.
அதிகபட்சப் பரப்பு மற்றும் செயல்திறனுக்காகத் தொழில்முறைப் பொருத்துதலையும் சிறந்த கமரா நிலைப்படுத்தலையும் எமது சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பவியலாளர்கள் உறுதிசெய்கின்றனர். ஒவ்வொரு பொருத்துதலும் TRAZET Video தளத்துடன் நேரடியாக ஒருங்கிணைக்கப்படுவதால், காணொளிக் காட்சிகள், GPS வாகனக் கண்காணிப்பு, பாதுகாப்பு எச்சரிக்கைகள், ADAS நிகழ்வுகள் மற்றும் விருப்ப DMS கண்காணிப்பை ஒரே கட்டுப்பாட்டுப் பலகையிலிருந்து தடையின்றி அணுகலாம்.
SKYPORT நிலையங்களில் பொருத்துதல்
நாடு முழுவதும் அதிகரித்து வரும் சான்றளிக்கப்பட்ட பொருத்துதல் நிலையங்கள்
முழு வசதிகளுடன்
துல்லியமான பொருத்துதலுக்கு முழு வசதிகளுடன் தயாராக உள்ளது.
இரத்துக் கட்டணம் இல்லை
நேர அட்டவணைப்படுத்தப்பட்ட சந்திப்புகளுக்கு வராவிட்டால் இரத்துக் கட்டணம் இல்லை.
போக்குவரத்துக் கட்டணம் இல்லை
எமது குழுக்கள் SKYPORT நிலையத்தில் உள்ளதால் போக்குவரத்துக் கட்டணம் இல்லை.
உங்கள் இடத்தில் பொருத்துதல்
உங்கள் அருகிலேயே, உங்கள் வசதிக்கேற்ப
வசதிகளை வழங்குங்கள்
கூரையுள்ள வேலைப் பகுதி • நம்பகமான மின் விநியோகம் • பொருத்துதல் முடியும் வரை தடையற்ற அணுகல்.
அதே நாள் இரத்துக் கட்டணம்
அதே நாள் இரத்துக் கட்டணம் அறவிடப்படும்.
போக்குவரத்துக் கட்டணம்
ஒவ்வொரு வருகைக்கும் ஒருவழிப் போக்குவரத்துக் கட்டணம் அறவிடப்படும்.
7 நாள் பொருத்துதல் உத்தரவாதம்
KLOUDIP மூலம் GPS கருவி பொருத்தப்படும்போது, அது சரியாகப் பொருத்தப்பட்டு, அளவுத்திருத்தம் செய்யப்பட்டு, துல்லியமான அளவீடுகளை வழங்குவதை உறுதிசெய்ய 7 நாள் பொருத்துதல் உத்தரவாதத்தை வழங்குகிறோம். இக்காலப்பகுதியில் அமைப்பைச் சுறுசுறுப்பாகக் கண்காணித்து, ஏதேனும் கவலைகள் அல்லது முரண்பாடுகளை உடனடியாக அறிவிக்குமாறு வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
7 நாள் உத்தரவாதக் காலத்திற்குப் பின், எந்தவொரு இட வருகை, மீள் அளவுத்திருத்தம், சீரமைப்பு அல்லது நுண் சரிசெய்தல் சேவைகளுக்கும் உரிய சேவைக் கட்டணங்கள் அறவிடப்படலாம்.
உத்தரவாதக் காலத்தில் வழங்கப்படும் ஆரம்பக் கருத்துகள், ஆரம்பத்திலிருந்தே அமைப்பு உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படுவதை உறுதிசெய்ய எமக்கு உதவுகின்றன.